ஸுராஹ் ஹுமசா – புறம்கூறல்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
16/4/15.
அஸ்ஸலாமு
அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம்
......
v கிராஆத் - சகோதரி பர்ஹானா.
v ஸுராஹ் ஹுமசா
சிறு குறிப்பு
v ஸுராஹ் ஹுமசா வா / வா பொருள் + வா / வா விளக்கம்- சகோதரி ரினோசா
v ஸுராஹ் ஹுமசா தப்சீர் – சகோதரி பாரீன. .
v நபிகள் நாயகம் வரலாறு - சகோதரி யாஸ்மின் .
v துஆஹ் மனனம் – உள்ளத்தை புரட்டாதிருக்க
v அஸ்மா உல் ஹுஸ்னா – 76 – 80
விளக்கம்:-
மக்கி ஸுராஹ் ... 9 வசனங்களை கொண்டது.
வைல் – கேடு , சாபம் , வெறுத்து , மனம் நொந்து ,
விரக்தி அடைந்து , கடும் கோபத்தின் உச்சியில் கூறுகிறான்.
நரக நெருப்பின் ஒரு பள்ளத்தாக்கு , தன்னை தானே
அளித்திட வேண்டும் அளவிற்கு அதி பயங்கரமானது.
லிகுல்லி – உலகத்தில் உள்ள அனைவருக்கும் , (
பின் வரும் குற்றத்தை செய்யும் அனைதவருக்கும் ) மூமீன் , முஸ்லிம் ,
நிராகரிப்பாளர்கள் என்று அனைவரும் அடங்கும்.
ஹுமசா – லுமசா – ஓரே நெருக்கமான பொருள் கொண்டவை .
பிறரைக் கேவலமாகக் கருதுவதும் இழிவுப்படுத்துவதும்தான் இத்தகைய மனிதனின் வழக்கமாக
இருக்கிறது / தொழிலே இது / கைதேர்ந்து தொடர்ந்து செய்வது / நபிகள் நாயகத்தை
மற்றவர்கள் நம்ப கூடாது என்பதற்கு , குறைஷிகள் குறை சொல்லும் , இழிந்து பேசும்
நபர்களை அழைத்து வந்து பேச வைத்தார்கள்.
வேர் எழுத்து – ஹும்ஸ் / லம்ஸ் – லும்ஸ்.
ஹும்ஸ் – கூரிய பொருள் கொண்டு மற்றவர்களை குத்தி
கிழிப்பது.
முகத்துக்கு நேராக நோவடிப்பது / சைகையால் தீங்கு
செய்து மனம் வேதனை பட வைப்பது . ஒருவரின் நடவடிக்கையை,தோற்றத்தை,பழக்கத்தை அப்படியே
சைகை செய்து அவர் முன் வேதனைப்படுத்துவது.பார்வையால் உதாசினப்படுத்துவது.பிடிக்காத
பட்டப்பெயர் பெயர் வைத்து அழைப்பது. கேவலமாக பார்த்து இழிவுப்படுத்துவது.
லும்ஸ் – கூரிய பொருள் கொண்டு மிருகத்தை
குத்துவது / அது ஓடும் / அப்படி மற்றவர்களை பற்றி பேசி பேச்சால் ஓட செய்வது.
நாவால் புண்படுத்துவது . முதுகுக்கு பின் கேலி , கிண்டல் நையாண்டி செய்வது ,
குடும்பம் , வம்சம் , குடும்ப பழக்கம் , குடும்ப தோற்றம் வைத்து பின்னால் பேசுவது
. பிறரின் நன்மையை விட்டு குறையை மட்டும் ஹை லைட் செய்து பிறரிடம் அதையே பேசுவது. பிறர்
வைத்து இருக்கும் நல்ல அபிப்ராயத்தை கேடுத்து தப்பானவர் என்று சொல் திறமையால் நம்ப
வைப்பது. குறையை நோண்டி நோண்டி தேடி அதை பெரிதாக பிறரிடம் சொல்வது. குட்டை, நெட்டை
என்று கிண்டல் செய்வது .
இவை அனைத்தும் பொறாமையின் காரணமாகவும்
இருக்கலாம் அல்லது அவர் பழக்கமே அப்படியாக இருக்கலாம் .
இந்த இரு சொற்களின் கடைசியில் வரும் “தா மர்பூதா” மற்றும்
ஹா என்று வரும் உச்சரிப்பு அதன் அதிக தன்மையை, உச்சநிலையை குறிக்கிறது, (ـة/ة)மேலும் குர் ஆனில் இப்படி முடியும் சொற்கள் அனைத்தும் பெண் பால் ஆகும். (FEMININE
GENDER ) ......
எ . கா – கியாமாஹ் – மிக அதிக வருடம் நிற்பது,
ஸாக்ஹா – நீண்ட சூர் ஊதப்படுவது.
இந்த ஸுராஹ்வில் பின் வரும் சொற்களிலும் இதே போல்
வருகிறது .....
கண்ணால் கூட ஹும்ஸ் லும்ஸ் செய்ய கூடாது.
இப்படிப்பட்ட ஹும்ஸ் லும்ஸ் மக்களுக்கு அல்லாஹ்
கேடு தான் என்று குறிப்பிட்டு சொல்கிறான்.
ஜமஆ – முழு வாழ்க்கையையும் பணத்தை சேகரிப்பதில்
குறியாக இருக்கிறான். ஹராம் / ஹலால் பாராமல் சேகரிக்கிறான்.
மாலன் – ஒருமை – உலகத்தில் உள்ள செல்வத்தை
ஒப்பிடும் போது அவன் வைத்து இருப்பது சொற்பமே .
அத்ததா - எண்ணி எண்ணி வைப்பது , முதல் முறை
செய்வது போல் அடிகடி செய்வது , செலவு செய்யாமல் , வரவு வராமல் , யாரும் எடுக்காமல்
எண்ணி கொண்டே இருப்பது . bank balance , insurance என்று பணத்தை பெருக்கும் எண்ணத்திலேயே இருப்பது .... பணத்தின் மீது உள்ள
மோகத்தால் , பேராசையால் , பண பைத்தியம் பிடித்து செய்வது .....
சேகரிப்பதில் , சேமிப்பதில் தவறு இல்லை ஆனால்
இறைவன் சொன்ன மாதிரி , ரப்புக்கு பிடித்த வகையில் சதகா , சகாத் கொடுக்காமல்
சேமிப்பது தவறு என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
முதல் வாசகத்துடன் இணைந்து வரும்
இந்த அடுத்த வாசகம் , தானாகவே இந்த பொருளை தருகின்றது , தனது செல்வ செழிப்பின் இறுமாப்பில்
இவ்வாறு பிற மக்களை கேவலமாகவும் , இழிவாகவும் அவன் கருதுகின்றான்,பின்னர் எண்ணி
எண்ணி வைத்தல் எனும் சொல்லிலிருந்து அம்மனிதனின் கஞ்ச தனம் மற்றும் பேராசை பற்றிய
காட்சி கண்ணெதிரே வந்து விடுகின்றது
மாலுஹு – அவனுடைய செல்வம் – அவன் அடுத்தவர்களை
ஏமாற்றி சம்பாதித்த செல்வம் , கடன் / லோன் / INSTALMENT ல் வாங்கி சேமித்தாலும் அது தனது என்று நினைத்து
இருப்பது . பின் வரும் வாரிசுகளை நினைக்காமல் தன்னை மட்டுமே நினைப்பது.( மூமீன் –
பின் வரும் சமுதாயத்தையும் , வாரிசுகளை எப்போதும் நினைவில் வைப்பான் என்று
விளக்குகிறார்கள்)
அஹ்லதா – மரணத்தை மறந்து பணம் நிலையாக வைத்து
இருக்கும் என்று எண்ணுவது , பணம் இருந்தால் மக்கள் மனதில் நிலைத்து இருக்கலாம் என்று
எண்ணுவது , பெரும் , புகழும் , முழு பாதுகாப்பும் பணத்தால் தான் கிடைக்கும் என்று
இருப்பது , இவன் மரணித்தால் மற்றவன் என்ற எண்ணம் இல்லாமல் உலகத்தில் லயித்து
வாழ்வது.
இந்த பணத் திமிறில் மற்றவர்களுக்கு மரியாதையை
கொடுக்காமல் இழிவாக நடத்துகிறான்.
கல்வி படிக்கும் போதும் இப்படிப்பட்ட சிந்தனை
வருவதாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் , அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.
ஒரு நேரத்தில் இந்த செல்வன்
அனைத்தையும் விட்டுவிட்டு வெறும் கையோடு இந்த உலகத்தை விட்டு செல்ல நேரிடும் எனும்
எண்ணங்கூட எப்போதும் அவனுக்கு வருவதில்லை.
வசனம் 1 – அவன் மற்றவர்கள் இடத்தில் எப்படி
இருப்பான் என்று அல்லாஹ் சொல்கிறான்
வசனம் 2,3 தனக்கு தானே எப்படி இருப்பான் என்று
அல்லாஹ் சொல்கிறான் .
முதல் மூன்று வசனத்தில் 5 வகை குற்றம்
செய்பவர்கள் சொல்கிறான் ,
1.
ஹுமசா – புறம் கூறுதல்
2.
லுமசா – குறை பேசுதல்
3.
ஜமஅ மாலன் – பொருளை சேகரிக்கிறான்
4.
அத்ததா – எண்ணி எண்ணி வைக்கிறான்
5.
மாலுஹு அஹ்லதஹு – அவனுடைய செல்வம் நிலைத்து இருக்கும் என்று எண்ணுகிறான் .
பின் வரும் வசனங்களில் இதற்கான தண்டனையை
சொல்கிறான் ....
ல யுன்பதன்ன – ல – சந்தேகமே இல்லை என்று சொல்வது
யுன்பதன்ன – நுன் – பா – சால் . மதிப்பற்ற
பொருளை தூக்கி விசுவது , துச்சமாக எறிவது .... ( அவன் வார்த்தைகளை வீசியதை விட
துச்சமாக )
ந ப் த்- எனும் சொல் அரபி மொழியில் ஏதாவது ஒரு
பொருள் வீணானது – இழிவானது எனக் கருதித் தூக்கி எறிவதற்கு கூறப்படுகிறது .
இதிலிருந்து தெரிய வருவதாவது , தனது செல்வ செழிப்பின் இறுமாப்பில் உலகில் பெரிய
அந்தஸ்து உடையவன் எனத் தன்னைத்தானே கருதிக் கொள்கின்றான்.ஆனால் மறுமை நாளில்
இழிந்தவனாய் நரகத்தில் எறியப்பட்டு விடுவான்.
பிஈ – இல் – நரகத்தின் ஆழத்தை குறிக்கிறது .
ஹுதமா – மூலத்தில் ஹுதமா எனும் சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது.இது ஹத்ம் என்பதில் இருந்து பிறந்த சொல் , ஹத்ம் என்பதற்கு
முறித்தல் , நசுக்குதல் , துண்டு துண்டாக சிதைத்து விடுதல் ஆகிய பொருள்கள் உண்டு. எந்த
ஒரு பொருள் நரகில் எறியப்பட்டாலும் அதனுடைய பயங்கர ஆழத்தால் கொளுத்து விட்டு
எறியும் நெருப்பால் துண்டு துண்டாக அப்பொருளை அது சிதைத்து விடும்.
வசனம் 6 – அல்லாஹ்வின் நெருப்பு – குர் ஆனில் இந்த இடத்தைத்
தவிர வேறு எங்கும் நரக நெருப்பு குறித்து ‘ அல்லாஹ்வின் நெருப்பு என்று கூறப்படவில்லை.
இந்த இடத்தில் இதனை அல்லாஹ்வுடன் இணைத்து சொல்லப்பட்டிருப்பதிலிருந்து அதனுடைய
பயங்கரமான நிலை மட்டும் வெளிப்படவில்லை, உலக செல்வத்தை பெற்று கொண்டு இறுமாப்பிலும்
பெருமையிலும் உழல்கின்றவர்களை அல்லாஹ் எந்த அளவு கடும் வெறுப்புடனும் ,
கோபத்துடனும் பார்க்கின்றான் என்பதும் புரிந்து விடுகின்றது, இதனால் தான் இத்தகைய
மனிதர்கள் எந்த நெருப்பில் தூக்கி எறியப்படுவார்களோ அந்த நரக நெருப்பை தனது
நெருப்பு என்று அல்லாஹ் குறிப்பிட்டு கூறுகின்றான்
முஅத்ததா – அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது.
அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது .
தத்தளிஉ – பாயும் , எட்டி எட்டி தாக்கி வேதனையை
அதிகரிக்கும்.பலம் வாய்ந்த எலும்புகளை உருக்கி இதயத்தை சூழ்ந்து கொள்ளும்.
அதை பிடிக்க முடியவில்லை என்று மனம் வேதனை மற்றும்
நெருப்பினால் உடல் வேதனை.
வசனம் – 9
1-
நரகத்தின் வாயில்களை அடைத்து அதன் மீது உயர உயரமான தூண்கள் நாட்டப்படும் .
2-
குற்றவாளிகள் உயர உயரமான தூண்களில் கட்டப்பட்டிருப்பார்கள்.
3-
இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் அறிவிப்பின்படி , நெருப்புக் கொழுந்துகள் நீண்ட
தூண்களின் வடிவில் எழுந்த வண்ணம் இருக்கும்.
ELASTIC போல் விரிந்து அவர்களை நசுக்கி , பிழிந்து வேதனை
கொடுக்கும்.தூண்களில் ஏறி ஏறி கதவை பிடிக்க ஏறும்போது அது வெப்பத்தால் குத்தி
கிழிக்கும் .இதயங்களில் பாயும்.
இனி நாம் என்ன செய்யலாம் .........
1.
வார்த்தைக்கு வார்த்தை பொருள் படித்தல்
2.
வைல் என்பதின் இரு பொருள் என்ன
3.
முதல் மூன்று வசனங்களில் அல்லாஹ் கேடு என்று சொல்லும் மனிதர்களின் தன்மை என்ன?
4.
4-9 வசனங்களில் அதற்க்கு ரப் கொடுக்கும் 5 தண்டனை என்ன.
5.
ஹுமஸ் – லுமஸ் – வித்தியாசம் என்ன
6.
ஹுதமா எப்படிப்பட்டது என்று ரப் சொல்கிறான்
7.
நப்த் என்பதின் பொருள் என்ன
8.
ஹத்ம் என்றால் என்ன
9.
அந்த நெருப்பு இதயங்கள் வரை சென்றடைவதன் கருத்து என்ன
10.
இத்திலாவு என்பதின் பொருள் என்ன
11.
இந்த ஸுராஹ் வில் ஹ / தா மர்பூதா (ـة/ة) வில் முடியும் சொற்களை எழுதுக
12.
அப்படி முடிய காரணம் என்ன
வஸ்ஸலாம் , ஜசாக் அல்லாஹு ஹைரன் .
மாஷா அல்லாஹ் உங்களில் சிறந்தவர் குர்ஆனை கற்றவரும் கற்றுக் கொடுப்பவரும்.அல்ஹம்துலில்லாஹ் உங்கள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சூரா ஜீல்ஜால் பிறகு உள்ள சூராக்களுக்கும் தப்ஸீர் பதிவு செய்யுங்கள்.இன்ஷா அல்லாஹ்
ReplyDelete