ஸுராஹ் அல் அஸ்ர்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
23/4/15.
அஸ்ஸலாமு
அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம்
......
v கிராஆத் - சகோதரி கதிஜா ஜாஸ்மின் .
v ஸுராஹ் அஸ்ர்
சிறு குறிப்பு
v ஸுராஹ் அஸ்ர் வா / வா பொருள் + வா / வா விளக்கம்- சகோதரி ரினோசா
v ஸுராஹ் அஸ்ர் தப்சீர் – சகோதரி சாஹிரா. .
v நபிகள் நாயகம் வரலாறு - சகோதரி யாஸ்மின் .
v துஆஹ் மனனம் – நல்ல கல்வி – ரிஸ்க் வேண்டி.
v அஸ்மா உல் ஹுஸ்னா – 81 – 85
சுருக்கமான ஸுராஹ் ஆனால் ஆழமான கருத்துகளை கொண்ட ஸுராஹ்
சிறிய ஸுராஹ் வில் ஆழமான கருத்துகளை சொன்ன மற்ற ஸுராஹ் களுக்கு முன் மாதிரியாக
திகழ்கிறது
மனிதனின் வெற்றிக்கான பாதை எது , அழிவிற்கும் , நாசத்திற்கும் மான பாதை எது
என்பதை திட்ட வட்டமாக சொல்லும் ஸுராஹ்
இந்த ஸுராஹ் வை சிந்தித்து ஓதினால் , பொருளை புரிந்து உணர்த்தால் , இதுவே அவர்களுக்கு
நேர் வழி காட்டப் போதுமானது- இமாம் ஷாபி (ரஹீ)
சஹாபாக்கள் மத்தியில் – ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டால் இந்த ஸுராஹ் வை ஓதி காட்டாமல் பிரிந்து செல்ல
மாட்டார்கள் .
புனிதமானது
சக்தி வாய்ந்தது
சிறப்பு வாய்ந்தது
மனிதனை நேரத்தின் மீது கவனம் செலுத்த வைப்பது
நாளின் இறுதியை குறிக்கிறது
ஆதம் நபி முதல் கியாமத் நாள் வரை குறிக்கிறது
பிழிந்து எடுப்பது போல்,நேரம் சுருங்கி கொண்டு இருப்பதை குறிக்கிறது , வேகமாக
செல்வதை குறிக்கிறது
மக்ரிப் தொழுகை நேரத்தை குறிக்கிறது
பகல் நேரத்தின் இறுதி தொழுகையான அஸர் தொழுகையை குறிக்கிறது.
அஸ்ர் தொழுகை நேரத்தில் பகல் நேர மலக்கு நாம் அன்று செய்த நன்மை , தீமையை
பதிவு செய்து செல்கிறார். ( shift change – ஸுப்ஹ் இருந்து அஸ்ர் வரை ஒரு மலக்கு , அஸ்ர்
இருந்து ஸுப்ஹ் வரை ஒரு மலக்கு , நம் அமல்களை பதிவு செய்வார்கள்)
3 வசனங்களை கொண்ட மக்கி ஸுராஹ்.





வல் அஸ்ர் – அஸ்ர் – நேரம்,காலம் அல்லாஹ்வின்
அருள்.
அல்லாஹ் அதன் மேல் சத்தியம் செய்வது
நேரம் -




ஹதீஸ் – நேரத்தை குறை சொல்ல கூடாது .
4826.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்'
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நேரம் குறித்து மார்க்க அறிஞ்ர்களின் கருத்து






இவை அனைத்திலும் நேரமின்மை காரணமாக நாம்
பரப்பரப்பாக இருப்போம்.
அசர் தொழுகை குறித்து ஹதீஸ் ….
பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்:
"(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்." என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ
"(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்." என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ
அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:
“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)
“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)
555.
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்" என்று அவர்கள் விடையளிப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்" என்று அவர்கள் விடையளிப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
1102. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...முஸ்லீம்
யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...முஸ்லீம்
நேரம்=வாழ்க்கை , நேரம் கழிய கழிய மௌத்தை
நெருங்கி கொண்டு இருக்கிறோம்.
இந்த குறுகிய
நேரம் நன்மை தீமை சம்பாதிக்க கூடிய காலம்.
ஐஸ் விற்பவனின் உதாரணம் – “ முதலீடு
உருகிக்கரைந்து கொண்டிருக்கும் மனிதன் மீது அதாவது என் மீது கருணை காட்டுங்கள் “
இது போல தான் நமது நேரமும் ..... மனிதனுக்கு
வழங்கப்பட்டு இருக்கும் ஆயுட் காலம் பனிக்கட்டி கரைந்து உருகுவதை போல் விரைவாக
கரைந்து கொண்டிருக்கிறது , இதனை வீணாக்கி விட்டால் , அல்லது தவறான வழியில்
செலவழித்து விட்டால் அதுவே மனிதன் அடையும் பேரிழப்பாகும்.
வசனம் 2 –
இன்ன – சத்தியத்துக்கு மேல் மற்றும்மொரு
அழுத்தம் , உண்மை என்று உறுதியாக சொல்வது
இன்ஸான் – ஒருமை , கூட்டமோ , சமுதாயத்தையோ இல்லாமல்
, தனி தனி மனிதனை குறிக்கிறது.
ஒவ்வொருவரும் நாளை மறுமையில் நேரத்தை பற்றி
கேட்கப்படுவான். அவன் மட்டுமே அவன் நேரத்திற்கு பொறுப்பாவான்.
நம்மை பார்த்து சொல்வது, நம்முல் பயம், பொறுப்பு
அதிகரிக்கும். நம்மை நாமே கவனிக்க சொல்கிறான்.
பி குஸ்ர் – அழமான நஷ்டத்தில் வெளியே வரமுடியாதவாறு மூழ்கி கிடக்கிறோம் ,
நஷ்டம் உதாரணம் – வியாபாரத்தில் நஷ்டம் போன்றது ,
முதலும் போய் , இலாபமும் போய் கை சேதப்பட்டு நிற்பது போல் , நேரத்தின் நஷ்டமும்.
நமது நேரத்தை நல்ல வழியில் செலவு செய்வதின் மூலம்
அல்லாஹ்வின் சந்தோசத்தையும் , மறுமையில் வெற்றியையும் அடைய முடியும்.
நேரத்தை வீணடிப்பது என்பது இம்மை , மற்றும்
மறுமை வாழ்க்கையை வீணடிப்பதுக்கு சமம்.
நஷ்டம் , வெற்றி என்பது மறுமை வரை தொடர கூடியதாக
உள்ளது.
சலிப்பு அடையாதவாறு அமல்கள் செய்தல்.
நேரத்தின் வீணடிப்பு குறித்து இமாம் தைமியாஹ் அவர்கள் கூறியது ,
மனிதன் இஸ்லாத்தின் முழு உண்மையை ஏற்க இரண்டு
விஷயங்கள் தடையாக உள்ளது ( நேரம் பாலாகுதல்)
1-
Shubuhaat (Doubts) 2 –
Shahawaat (Temptations)
1.
சந்தேகங்கள் 2. மனோ இச்சை சம்பந்தமான விசயங்களில் விழுதல்.
1.
முழுவதும் நம்பினாலும் ஒரு வித சந்தேகத்திலேயே இருப்பார்கள் , மார்க்க அறிஞர்கள்
கொடுக்கும் விளக்கத்தையும் ஏற்று திருப்தி அடைய மாட்டார்கள்.
2.
தடை செய்த விஷயங்கள் மீது ஆசை கொண்டு செல்லுதல்.
வசனம் 3 –
இலா – தவிர .
அதிகப்படியான மக்கள் நஷ்டத்தில் இருகிறார்கள் ,
சொற்பமானவர்களே வெற்றி அடைகிறார்கள்.
அல்லதீன – எவர்கள் , பன்மை காரணம் நன்மை
புரிவதிலும் , உண்மையை எத்தி வைப்பதிலும் கூட்டாக , ஜமாத்தாக செயல்படுதல் வெற்றியை
கொடுக்கும் தனியாக நின்று போராடுவது கடினம். ஒற்றுமையாக செய்வதால் இமான்
அதிகரிக்கும்.
அல்லாஹ்வை பற்றி நினைவு கூரும் சபையில்
மலக்குகள் துஆ கிடைக்கும். பாசிடிவ் எனெர்ஜி கிடைக்கும் , மனம் பாதை மாறி
செல்லாது.
இந்த உலகத்தில் எப்படிப்பட்ட கஷ்டம் இழப்பு
வந்தாலும் , அந்த நொடியே ரப் நமக்கு இதை விட மேலானதை மறுமையில் வைத்து இருக்கிறான்
என்ற சிந்தனையை கொண்டு வருவது தான் ஈமான் என்னும் பலத்தின் சுவையை ருசிக்க, உணர உதவும்
முக்கிய பாண்பு ஆகும்.
இது குறித்து மற்றுமொரு ஹதீஸ் ....
“எவரிடம்
மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை
உணர்ந்தவராவார். (அவை)
1.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது,
2.
ஒருவர் மற்றொருவரை
அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
3.
நெருப்பில் வீசப்படுவதை
வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது” என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற கூடிய செயல்கள் –
இறை நம்பிக்கை – ஈமான்
1.
உண்மையாக உள்ளத்தால் அல்லாஹ்வை ஏற்று , நாவால் உறுதி கொள்வது
2.
இறைவனின் அம்சம், தன்மை மற்றும்
அவனின் அன்பை புரிதல் மற்றும் ஏற்று கொள்ளுதல் ,
3.
அல்லாஹ் சொன்னதை கேள்வி கணக்கு இன்றி கீழ்ப்படிதல்.
4.
தூதரை ஏற்று கொள்ளுதல்.அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை நம்புதல்
5.
மறுமையை நம்புதல்.( சுவனம் / நரகம் உண்டு )
தூதரை ஏற்று கொள்ளுதல் – உதாரணம் அபு பக்கர் (ரலி)
– நபியின் மிஹ்ராஜ் பயணம் , அதை சொன்ன உடன் அபு பக்கர் (ரலி) நம்பியது.
நற்செயல்கள் புரிவது
இக்லாஸ் உடன் , முழு நம்பிக்கை வைத்து ,
அல்லாஹ்வும் ,இறை தூதரும் சொன்ன வழியில் அமல்கள் செய்வது . எந்த ஒரு அமலும்
இறைவனுக்காக , அவன் சந்தோசத்தை , அவன் திருப்தியை மட்டுமே நாடி செய்வதாக மனதில்
எண்ணி கொள்ளவேண்டும்.
1.
இறைவனுக்கு செய்ய வேண்டியது – தொழுகை , நோன்பு , ஹஜ்
2.
மனிதர்களுக்கு செய்ய வேண்டியது – சதகா , சகாத் , விருந்தினர் உரிமைகள் ,
பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தல் , அனுமதி பெற்று மற்றவர் வீட்டுக்கு செல்லுதல்.
நம்மை சுற்றி சாலிஹான மக்கள் இருந்தால் நம்மை
எப்போதும் இறை நினைவுலேயே இருக்க உதவும் . ( அல்லதீந – எவர்கள் பன்மை )
இறைவனை நினைவு கூறும் இதயங்கள் அமைதி அடைகின்றன.
எந்த கஷ்டம் வந்தாலும் இன்னா லில்லாஹி என்று கூறி பொருத்து கொள்வார்கள்.
அமல்கள் செய்ய செய்ய குணம் மாறும் , அழகான
பக்குவமான குணமாக மாறும்.
சத்தியத்தை எடுத்து கூறி கொண்டே இருப்பார்கள்
அவர்கள் ஈமான் கொண்டு பின் நற்செயல்கள் செய்ய
ஆரம்பித்த பின் , மற்றவர்களையும் சத்தியத்தின் பால் அழைப்பார்கள் , தொழுகையின்
சிறப்பை கூறி நல்வழிப்படுத்துவார்கள்.
ஒருவருக்கு ஒருவர் எத்தி வைத்து கொண்டு நன்மையை
மற்றும் படித்ததை நினைவு படுத்தி கொள்வார்கள், அவர்கள் அமல்களையும் புதுப்பித்து
கொள்வார்கள்.அதே போல் மற்றவர்கள் சொல்லும் போதும் அதை பக்குவத்தோடு ஏற்று
நடப்பார்கள்.
உலக வாழ்வு என்பது தற்காலிகமானது , மறுமையே
நிரந்தர வாழ்வுக்கான இடம் என்று அதற்க்கு நன்மை சேர்க்க எடுத்துரைப்பார்கள்.
நல்லதை ஏவி தீயதை தடுப்பார்கள். இதனால் இம்மை ,மறுமையிலும்
நன்மை பல மடங்காக சேர்ந்து கொண்டே இருக்கும்.
சொல்வதை அவர்கள் வாழ்வில் நடைமுறை படுத்த செயல்
படுவார்கள் , குர்ஆன் வசனங்களை நினைவுப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.
உதாரணம் – மரண படுக்கையில் இருக்கும் ஒருவர்
வசியத் செய்வது போல் – மரணம் நெருங்குகிறது , நேரம் மிக குறைவாக இருக்கிறது , நெருக்கமாக
இருக்கும் நபர்களிடம் , மரண தருணத்தில் முக்கியமான , பொக்கிஷமான விஷயம்
சொல்வார்கள், கேட்பவர் அதை அப்படியே செய்ய முயல்வார்.
பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை செய்வார்கள்
.
பொறுமை இல்லை என்றால் மேல் கூறிய மற்ற 3
விசயங்களையும் செயல் படுத்த முடியாது.
நல்லதை ஏவி தீயதை தடுக்கும் போது ஏற்ப்படும்
இன்னல்களை பொருத்து கொள்வார்கள் , அதை மற்றவர்களுக்கும் அறிவுறுத்துவார்கள்.
துன்பம் வரும்போதும் பொறுமையை கையாள்வார்கள் ,
அப்படி இல்லாத சமயம் , அவர்களை சுற்றி உள்ள சமுதாயம் பொறுமையை அவர்களுக்கு எடுத்து
சொல்வார்கள்.
சத்தியத்தை பின்பற்றுவதிலும் அதற்க்கு பக்கபலமாக
இருப்பதிலும் மனிதன் எதிர் கொள்ள நேர்கின்ற துன்பங்கள், துயரங்கள் , சிரமங்கள்
ஆகியவற்றின் முன் , நிலைகுலையாமலிருக்க்கும் படி ஒருவருக்கு ஒருவர் அறிவுறுத்திய
வண்ணம் இருக்க வேண்டும்.
உஸ்தாத் நௌமன் அலி கான் – கார்ட்டூன் .....
1.
தண்ணீரில் முழ்கி கொண்டே இருக்கிறோம் , அதே சமயம் சுயநினைவு இல்லாமல்
இருகிறோம் , ஆழத்துக்கு போகிறோம் , அதில் இருந்து வெளியே வர முதலில் முழிக்க
வேண்டும். அது எப்படிப்பட்ட கனவு கண்டு கொண்டு இருந்தாலும் சரி , (வீடு ,
பிள்ளைகள் , கணவன் , பொழுதுபோக்கு ) முழித்த உடன் வெளியே வர முயற்சி செய்ய வேண்டும்
, ஏன்? நேரம் குறைவாக இருக்கிறது மூழ்கி கொண்டே இருகிறோம். நீச்சல் செய்து முயன்று
வெளியே வரும்போது
2.
நம் காலில் கயிர் கட்டி ஏதோ உள்ளே இழுக்கிறது , அங்கு நம் உறவினர் ஒருவர்
இருக்கிறார் , அவரை எழுப்பி நீச்சல் சொல்லி கொடுத்து மேலே வர செய்கிறோம் , வந்த
பின் பார்த்தால் நம் உறவினர் , நண்பர்கள் உள்ளே
இருக்கிறார்கள் ,
3.
இவர்கள் அனைவருக்கும் நீச்சல் சொல்லி கொடுத்து வெளியே கொண்டு வர பொறுமையாக
செயல் பட வேண்டும் , அதே சமயம் நேரமும் குறைவாக இருக்கிறது ,
4.
வெளியே வர நீச்சல் படிக்க வேண்டுமே தவிர அந்த நீச்சலில் தேவை இல்லாத சந்தேகம்
உண்டு பண்ணி , நேரத்தை செலவு செய்தால் , நேரத்தை வீணடித்து முழ்கி கொண்டே
இருப்போம்.
5.
அதே சமயம் விழிக்காமல் கனவே நன்றாக இருக்கிறது என்று இருந்தால் , மொத்த
நேரமும் வீணாகி, கைநஷ்டப்பட்டு இருப்போம், இவை இரண்டும் தான் இப்னு தைமியாஹ் ரஹ்
கூறிய ஷுபுஹாத் , ஷஹாவாத் .
இனி நாம் என்ன செய்யலாம் ....
வார்த்தைக்கு வார்த்தை whatsapp
1. ஈமானின் சுவையை
எப்போது உணர முடியும் whatsapp
கூறுக.
2. அசர் தொழுகையின்
முக்கியத்துவத்தை , ஹதீஸ் whatsapp கூறுக.
3.
இந்த ஸுராஹ் திட்டவட்டமாக சொல்லும் கருத்து என்ன?
4.
இந்த ஸுராஹ் குறித்து இமாம் ஷாபி ரஹ் அவர்களின் கருத்து என்ன?
5. காலத்தை குறை
சொல்லுவது குறித்த ஹதீஸ் எழுதுக
6.
சஹாபாக்கள் மத்தியில் இந்த ஸுராஹ் எப்படிப்பட்டதாக இருந்தது?
7.
இமாம் இப்னு தைமியாஹ் ரஹ் நேரம் வீணகுவதிலும் , இஸ்லாத்தை முழுவதுமாக
நம்புவதில் இருக்கும் 2 தடைகள் குறித்து சொன்ன விஷயம் என்ன?
8.
இந்த நஷ்டத்தில் இருந்து வெற்றி பெற்றவர்கள் யார் என்று ரப் கூறுகிறான்
9.
இன்சான் என்று ஒருமையில் சொல்ல காரணம்
10.
அல்லதீன என்று பன்மையில் சொல்ல காரணம்
வஸ்ஸலாம்
ஜசாக் அல்லாஹு ஹைரன்.
No comments:
Post a Comment