Saturday, October 3, 2015

வகுப்பு 18 - ஸுராஹ் அல் – ஆதியாத்தி



30/9/15.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

  • கிராஆத் - சகோதரி கதிஜா ஜாஸ்மின்.
  • முந்திய ஸுராஹ்கள் மீட்டல்.
  • ஸுராஹ் ஆதியாத்தி சிறு குறிப்பு
  • ஸுராஹ் ஆதியாத்தி வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா
  • தப்சீர் – சகோதரி சப்ரினா.


பொருள் :- மக்கி ஸுராஹ் .

வல் ஆதியாத்தி –

வ – அழுத்தமாக சத்தியம் செய்து கூறுகிறான்.இதில் இரண்டு பகுதி அடங்குகிறது..

  1. சத்தியம் செய்யும் பொருள் ( குதிரை , படையெடுப்பு )
  2. சத்தியத்தின் பதில் ( மனிதன் நன்றி கேட்டவன் , செல்வத்தின் மீது பற்று .......)

இந்த சத்தியம் எதை குறிக்கிறது –

  1. அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கிறான்
  2. நம் கவனத்தை முழுவதுமாக ஈர்க்க
  3. பிடித்த விஷயத்தை பற்றி பேசி எச்சரிகிறது

முதல் 5 வசனங்கள் அரபுகளின் கவனத்தை திருப்ப – குதிரைகளை சம்பந்தப்படுத்தி சொல்கிறான் ( கௌரவம் , மரியாதை , கோத்திரம் , குதிரை , பலம் , போர் )  ........ இதை கேட்கும் போது அரபுகள் கண்முன்னே அந்த காட்சி ஓடுகிறது .

ஆதியாத் – அதா – ஒருமை . ஆதியாத்தி – பன்மை , பெண்பால் , இலக்கை தவறாமல் முடிப்பது.

வேகமாக ஓடுபவைகள் ( பெண் குதிரைகள் , ஆண் குதிரைகளை விட வேகமானது , சுறுசுறுப்பானது).

விரோதத்தை மனதில் கொண்டு வேகமாக இலக்கை நோக்கி பாய்கிறது , எந்த பக்கமும் திரும்பாமல் ஒரே திசையை நோக்கி ஓடுகிறது.

இதில் குதிரை என்று குறிப்பிடவில்லை ஆனால் பின் வரும் “ ளப்ஹ் “ என்ற சொல் – குதிரை வேகமாக ஓடும் போது ஏற்படும் மூச்சிஓசை. இதை வைத்து இது குதிரையை தான் குறிக்கிறது என்று அறிஞ்ஞர்கள் கருத்து பதிகிறார்கள்.

வசனம் 2 –

பாfa என்ற சொல் முன் உள்ள வசனத்தின் தொடர்ச்சியை குறிக்கிறது.( அதே குதிரையை சொல்கிறான் ) நெருப்பு மூட்டுபவைகள்...வேகமாக ஓடுவதால் கால்களில் இருந்து நெருப்பு , தீ பொறி வருகிறது. சத்தத்துடன் , அழுத்தமாக குதிரை கால் குழம்புகள் தரையில் உரசி தீ எழும்புகிறது.இந்த சம்பவம் அதிகாலையில் இருள் இருக்கும் நேரத்தில் நடக்கிறது. ( ஈர பதமான நிலத்திலும் தீ கக்குகிறது)

( பத்துக்கு மேற் ப்பட்ட குதிரைகள் பாலைவனத்தில் , நிற்காமல் , முச்சிரைக்க இப்படி வேகமாக தீ கக்க ஓடுவதை... – இந்த வசனங்கள் முலம் அல்லாஹ் நம் கண் முன் கொண்டு வருகிறான் )

வசனம் 3 – எதிரிகள் மீது அதிகாலையில் திடீர் என்று தாக்குகிறது .... எதிரிகளை நெருங்கி செல்கிறது , மங்கலான நேரம் , தெளிவில்லாத சமயத்தில் ....

வசனம் 4 – asarna – கிளப்புவது – எதை – நக்ஹன் – தூசு – வேகத்தால் கடும் தூசி பறக்கிறது .. பின்னால் வருபவர்களை மூடும் அளவிற்கு ... எதுவும் தெரியாத அளவிற்கு தூசு பறக்கிறது. ஈர நிலமாக இருந்தாலும் , தரிசு பூமியாக கட்டான் தரையாக இருந்தாலும்  குதிரையின் அழுத்தமான வேகத்தால் புழுதி கிளம்புகிறது. தூசியின் காரணமாக கண் தெரியாததால் சத்தம் எழுப்பி கொண்டு படை செல்கிறது.

வசனம் 5-

குதிரைகள் எதிரிகளின் நடுவே சென்று நிற்கிறது .... எவ்வித பயமும் இல்லாமல் .... சோர்வு இல்லாமல் .... தன் எஜமானுக்கு கட்டுப்பட்டு நிற்கிறது.

இது வரை சத்தியம் செய்து விட்டு இதன் பின் சத்தியத்தின் பதில் பற்றி கூறுகிறான்.

இதன் மூலம் அவன் சொல்ல வரும் செய்தி பின் வரும் வசனங்களில்

வசனம் – 6

அரபுகள் பெண் குதிரையை , உயிரை பணயம் வைத்து போருக்கு விரைந்து செல்லும் குதிரைகளை மிகவும் நேசித்தனர் .... அதன் வலிமை , விசுவாசம் , வேகம்  பற்றி கவிதைகள் பாடினர். போரில் முதலில் குதிரைகள் காயப்பட்டாலும் , இறக்கும் வரை அது தன் எஜமானனுக்கு விசுவாசமாக இருக்கும் , போரில் இருந்து ஓடி விடாது.

இதன் மூலம் நாமும் அடிமைகள் தான் அல்லாஹ் தான் எஜமானன் என்பதை நினைவு படுத்துகிறான் . நாம் எப்படி நம் முதலாளியிடம் இருக்கிறோம் என்பதை சொல்கிறான்.

கநூத்- நன்றி கேட்டவன் – முழுவதுமாக இறைவனிடத்தில் இருந்து துண்டித்து நன்றி மறந்தவனாக இருக்கிறான்.

குர் ஆனில் ஒரு முறை மட்டுமே வரும் சொல் – மிகவும் நன்றி கேட்டவன்.

  • எந்நேரமும் தம்மிடம் உள்ள குறைகளை மட்டுமே சொல்லி கொண்டு இருப்பான். அல்லாஹ் கொடுத்த அருள்களை கொஞ்சம் சிந்திக்காமல் , அதற்கு நன்றி செலுத்தாமல் இருப்பான்.
  • எத்துனை நிஹ்மத்துகள் இருந்தாலும் அதை பற்றி திருப்தி கொள்ளாமல் இல்லாததை மட்டுமே சொல்லி கொண்டு இருப்பான்.( குதிரை , கொள்ளை , பணம் .......... தவறான காரியத்துக்கு பயன்படுத்துகிறான் )
  • பொட்டல் பூமி எப்படி உழுதாலும் ,எவ்வளவு விதை போட்டாலும் பலன் தராது , அது போல இவனும் எவ்வளவு அருள் கிடைத்தாலும் வாங்கி கொண்டு திரும்ப நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டவனாக இருக்கிறான். ( குதிரை பொட்டல் பூமி , நெருப்பு , புழுதி )
  • சிறு இழப்பையும் பெரிதாக குறை கூறி முறையிடுகிறான்.
  • ( குதிரை – இரவில் – குறை கூராமல் – போர் – காயம் = நாம் இரவில் என்ன செய்கிறோம் ? )
  • செல்வத்தின் மீது உள்ள மோகத்தால் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

வசனம் – 7

இதற்க்கு அவனே சாட்சியாக இருக்கிறான் ... அவன் செயல்களில் அது பிரதிபலிக்கும்... தொடர்ந்து சாட்சியாக இருக்கிறான். தப்பு செய்யும் போது நமக்கே தெரியும் . மறுமையில் அனைத்து உறுப்புகளும் பேசும்.

வசனம் 8

செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டு இருக்கிறான்.

தீவிர மோகம் ... ஹைர் – நல்லது ஆனால் இங்கு செல்வத்தை குறிக்கிறது.

ஹுப் – மோகம் , காதல் . நல்ல பொருள் வாங்க வேண்டும் என்பதை விட அது கிடைத்து விட வேண்டும் என்று நினைப்பதில் ஹுப் தொடக்கம்.

செல்வம் தான் உலகில் சிறந்தது என்று எண்ணுகிறான்.அதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று இருக்கிறான்.

செல்வ மோகத்தில் மிதந்து கொண்டு இருக்கிறான்.நன்றி கெட்டவன் – செல்வத்தை முதன்மை படுத்துகிறான் , அதனால் அவன் நடத்தை சாட்சி கூறுகிறது. எப்படி ? செல்வத்தை பெருக்குவதில் அல்லாஹ் விற்கு செய்யும் கடமைகளை தவற விடுகிறான் . அடுத்து சக மனிதர் , குடும்பத்துக்கு செய்யும் கடமையை தவற விடுகிறான் , இதில் இருந்து விலகி செல்வத்தை பெருக்குவதில் நேரத்தை கழிக்கிறான்.

ஷஹீத் – இறுக்கமாக கயிற்றில் கட்டி இருப்பது . செல்வதை கட்டி இழுத்து கொண்டு இருக்கிறான். ஒன்ரை இழந்தாலும் புலம்பி தள்ளுதல்.

வசனம் 9

மண்ணறைகளில் இருந்து சிதறி வெளிவருவான் , அனைத்து பொருளும் வெளியில் வரும் , ( மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க ,கொள்ளையர்கள் , பொருளை , கொலை செய்ததை மண்ணுக்குள் மறைத்து வைப்பார்கள் )

வசனம் 10

உள்ளங்களில் இருப்பது அனைத்தும் வெளிவரும் . தோல் உரித்து காட்டப்படும். நெஞ்சுகளில் ஒரு ஒரு சிறு அணு அளவு விசயமும் பதிவாகி இருக்கும் , நாம் மறந்தாலும் சரியே அது பதிவாகி இருக்கும் , மெஸ்மெரிசம் செய்து அனைத்தையும் வெளியில் பேச வைப்பது போல் நம் நெஞ்சில் உள்ள அனைத்து விசயமும் வெளிவரும் ,பிறப்பில் இருந்து .... ஆதாரம் நம் உள்ளேயே இருக்கு , சாட்சி உள்ளேயே இருக்கு ... மனம் மலை போன்றது , சிறி பகுதி வெளியே , பூமிக்கு அடியில் பெரும் பகுதி உண்டு , அது போல் வெளியில் தெரிவது உண்மையான உள்ளம் அல்ல , உள்ளே இருப்பது தான் உண்மையான மனித உள்ளம். ( நல்லதே நினை , அமல்கள் அனைத்தும் எண்ணத்தை பொறுத்தே ) ஈமான் , தக்வா , ,,,,,,,

ஏற்கனவே இருக்கும் கெட்ட விஷயத்தை எப்படி வெளி கொண்டு வருவது .... அதற்கு நல்ல விஷயங்களை உள் கொண்டு போக வேண்டும் ......தொழுகை , இஹ்திகாப் .......

வசனம் 11

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் , ஆனால் மறுமையில் அனைவருக்கும் அது காட்டப்படும் ......

இந்த ஸுராஹ் 3 பிரிவுகளாக பிரிக்கிறார்கள் .

  1. சத்தியம் – படையெடுப்பு
  2. பதில் – மனிதன் பற்றி
  3. மஹ்சர் வெளி பற்றி

முதல் 5 வசனம் எதை குறிக்கிறது ---- அறிஞர்கள் கருத்து ,இதில் 4 வது கருத்து தான் இந்த ஸுராஹ் கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அறிஞர்கள் கருத்து பதிகிறார்கள் .....

  1. ஜிஹாத் குறிக்கிறது .
  2. எஜமான் விசுவாசம் குதிரை – மனிதன் நன்றி கேட்டவன்
  3. அரபு தீபகற்பம் – ரத்தம் சிந்தும் நிலை , அற்ப விசயங்களுக்கு போர் , சண்டை
  4. காட்சி பொருத்தப்பாடு – மனிதன் வாழ்தல் , எதிர் பாராமல் மறுமை நிகழ்வு , செல்வ போதையில் இருக்கும் போது , மஹ்சர்......

இனி  நாம் என்ன செய்யலாம் ...... ( HOMEWORK )

  1. வா – வா படித்தல்
  2. சத்தியத்தின் இரண்டு பகுதி என்ன
  3. அந்த பகுதி எதை குறிக்கிறது.
  4. முதல் 5 வசனங்கள் அல்லாஹ் எதை பற்றி பேசுகிறான்.
  5. ளப்ஹ் – விளக்குக.
  6. இந்த ஸுராஹ் வின் 3 பிரிவிகள் என்ன
  7. முதல் 5 வசனங்கள் சொல்லும் பொருத்தமான கருத்து என்ன ?
  8. கநூத் – சொல்லின் சிறப்பு என்ன . (ஒரு வரி பதில்)
  9. இதில் அல்லாஹ் பெண் குதிரையை சொல்ல காரணம் என்ன
  10. குதிரையின் எந்த முக்கிய பண்பு மனிதனிடம் மிக குறைவாக உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஜசாக்குமுல்லாஹு ஹைரன்.

வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment