Wednesday, October 21, 2015

துஆஹ் – 21







செய்யிதுல் இஸ்திஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்பு கோரல் துஆ!


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’


اَللّٰهُمَّ اَنْتَ رَبِّىْ لآ اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَاْ عَبْدُكَ وَاَنَاْ عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُلَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ بِذَمنْبِىْ فَا اغْفِرْلِى فَاِنَّه لَا يَغْفِرُ الذَّنُوْبَ اِلَّا اَنْتَ


அல்லாஹும்ம! அன்த்த ரப்பி லா இலாஹ இல்லா அன்த்த க(KH)லக்த்தனீ   அன (B)ப்துக்க   அன அலா அஹ்திக்க, வ வஃஅதிக்க மஸ்ததஃது அஊது பி(B)க்க மின் ஷர்ரி மா ஸனஃது  (B)பூ உ லக்க பி(B) நிஃமத்திக்க அலைய்ய, வ அ(B)பூ உ  பி(B) தன்பீ ஃபஃ(F)ஃபிர்லீ (F)ஃபஇன்னஹு லா யஃ(F)ஃபிருத் துனூ(B)ப இல்லா அன்த்த’


என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.


பொருள்: யா அல்லாஹ்! நீயே எனது இரட்சகன்! நிச்சயமாக உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் யாருமில்லை, நீயே என்னைப் படைத்தாய்! மேலும் நான் உனது அடிமை!நான் என்னால் இயன்ற அளவு உனது உடன்படிக்கையிலும், வாக்குரிதியிலும் நிலைத்திருக்கிறேன். நான் செய்த கெடுதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்களித்த அருட்கொடைகளை ஏற்றுக்கொள்கிறேன். எனது பாவத்தை ஏற்றுக்கொள்கிறேன். எனவே நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில், நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிக்கக்கூடியவன் யாருமில்லை!


இதனை யார் மாலையில் ஓதி காலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். மேலும் இதனை யார் காலையில் ஓதி மாலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவரும் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர்:ஷத்தாத்இப்னுஅவ்ஸ்(ரலி)
ஆதாரம்: புகாரி




                                                                      

No comments:

Post a Comment