Thursday, October 8, 2015

வகுப்பு 19- ஸுராஹ் அல் – ஸில்ஸால்


ஸுராஹ் அல் – ஸில்ஸால்
15/10/15.
அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
  • கிராஆத் - சகோதரி ஷிபா.
  • ஸுராஹ் ஸில்ஸால் சிறு குறிப்பு
  • ஸுராஹ் ஸில்ஸால் வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா
  • சீராஹ் – சகோதரி யாஸ்மின்.


விளக்கம் -
மக்கி ஸுராஹ் .(வார்த்தை நடையை வைத்து ). 8 வசனங்கள் கொண்டது.
மறுமையை நினைவு படுத்தும் ஸுராஹ்களில் ஒன்று. 3 சந்தேகங்களுக்கு விடை தரும் ஸுராஹ் – 1. இந்த பூமி நிலையானது தானே அது எப்படி அழியும்? 2. நாம் செய்யும் சிறு சிறு விசயங்களும் நொடியில் பதியப்பட்டு , எழுதப்படுகிறதா? 3.நமக்காக மறுமை நாளில் பரிந்து பேச யாரும் உண்டா? ( ஷிர்க் அடிப்படை ).
வசனம் 1 –  ( 4 , 3 வேர் சொல் )
இசா – கண்டிப்பாக நடக்கும் ஒரு நிகழ்வை சொல்கிறான் , ஆனால் மனிதன் அதை அதிகம் மறந்து விடுகிறான்.
உலகம் அழியப்படும் என்று கூறும் வசனம்.இறந்த கால சொல் . கடுமையான ஆட்டம் , அதிர்வு , தவறுவது , தொடர் அதிர்வால் மனிதன் தடுமாறி விழுகிறான்.( தெளிவில்லாமல் , போதையில் தடுமாறுவது போல் ) நிலையான பூமி நிலையில்லாமல் ஆடுகிறது.
அல்லாஹ் செய்வது போல் சொல்லாமல் , அவன் கட்டளை படி அது தானாகவே செய்கிறது. PRE PROGRAMED . முன்னமே இந்த நிகழ்வு பதியப்பட்டு விட்டது . மிக சுலபமாக இது நிகழ்த்து விடும் என்று கூறுகிறான் . 2 முறை ஸில்சால் வருவது – கடுமையாக வலியுறுத்தி காட்டுகிறது மற்றும் தொடர்ந்து நடக்கும் என்பதையும் சொல்கிறான். கடைசியில் வரும் ஹா  எழுத்து – பூமியை குறிக்கிறது . பூமியின் முழு அதிர்வை சொல்கிறது , அதாவது இதற்க்கு முன் இப்படி ஒரு நிகழ்வு , அதிர்வு வந்ததே இல்லை , இதுவரை பூமியின் ஒரு சில இடங்களில் அதிர்வு நடக்கும் ஆனால் இது முழு பூமியும் அல்லாஹ் வின் கட்டளை படி அதன் உச்சகட்ட அதிர்வை வெளி கொண்டு அதிர்கிறது. ( எந்த இடத்திலும் அடைக்கலம் தேட முடியாது )
( சுல்சில  , சில்சால் – ஹுரூப் படி நிறுத்து நிறுத்தி நடக்கும்)
( சூர் சத்தம் – மலைகள் சிதறுவது ..... )
வசனம் 2 –
முழுவதுமாக பிழிந்து வெளியில் கொண்டு வருவது.ஒரு பெட்டியில் இருந்து அனைத்து பொருளையும் வெளியில் தலை கிழாக தட்டு வது போல்.பூமி தன்னிடம் உள்ளது அனைத்தையும் வெளியே கக்கும் , சொல்லும் , அறிவிக்கும். தன்னிடம் உள்ள அனைத்தையும் கக்கி லேசாகி விடும் .... பூமி பாரம் – அக்கிரமம் தாங்காது – உவமை.
பயணத்தில் மூட்டை முடிச்சி தூக்கி செல்வது போல் ... பூமியும் பயணம் செய்து கொண்டு இருக்கிறது ... இடம் வந்ததும் அனைத்தையும் வெளியில் தள்ளுகிறது.
மனிதர்கள் , தங்கம் , எண்ணெய் , வைரம் , நாம் செய்த செயல்கள் , பழங்கால பொருள்கள் , பெரிய பெரிய தூண்கள்.... , அனைத்தும் வெளியில் இருக்கும் ஆனால் மனிதன் திரும்பி கூட பார்க்க மாட்டான் , இதற்காக கொலை , கொள்ளை , திருட்டு , நேரம் என்று பூமியில் வாழும் போது இருந்தான் .
 நாம் ஒரு ஒரு நொடி செய்த அனைத்து செயலகளையும் சொல்லும் .....
வசனம் – 3
எல்லா மனிதர்களும் திடுக்கிட்டு , அதிர்ச்சியில் கேட்ப்பார்கள் , தனக்கு அறிவிப்பு வந்தது , அல்லாஹ் சொல்லி இருக்கிறான் என்பதை முழுவதுமாக மறந்து இருப்பார்கள்.
 
 
 
 
வசனம் 4 ,5- நாம் செய்த ஒரு ஒரு அணு அளவு செயலையும் அப்படியே சொல்லும் ,  எங்கு என்ன செய்தோம் என்பதை அப்படியே படம் பிடித்து அறிவிக்கும். முதல் தடவை கேட்ப்பது போல் இருக்கும் , நினைவில் இருந்து மறந்த விசயங்கள் அனைத்தையும்.- ஹதீஸ்... அறிவிப்பு.
 
நமக்கு மட்டுமே தனிமையில் நடந்த விசயங்கள்., எதிர்பார்க்கா செய்திகள்.ஜீன் மற்றும் மனிதன் செய்த அனைத்தையும் பூமி பேசி சொல்லும்.- ஹதீஸ் ( கீழே)
அனைத்து செயலும் பதிவாகி இருக்கிறது.இருட்டில் செய்தது , மறைவில் செய்தது....
பழங்கால மக்கள் புரியமுடியாமல் இருக்கலாம் , ஆனால் இப்போது உள்ள நவீன கருவி மூலம் எங்கிருத்தோ பேசுவதை நாம் அனைத்து மக்களும் கையில் வைத்து கேட்கிறோம்....
இதை record செய்து கேட்ப்பது போல் ... அல்லாஹ் பூமியை பேச வைப்பான்.ஒரு ஒரு அசைவும் கதிர்கள் மூலம் பதிவாகிகொண்டு இருக்கிறது. அனைத்தையும் மனிதன் உணர்வான், இறைவன் கட்டளைபடி பூமி உணர்த்தும். அவ்ஹா.... Already programmed , recording every act.fully technology.
பூமி தன் மீது நடந்த கொடுமைகள் வெளியில் சொல்லி கக்க பொறுமையாக ..காத்து கொண்டு இருக்கிறது , நடக்கும் அக்கிரமங்களை அடக்கி  கொண்டு இருக்கிறது , இறைவன் கட்டளை வந்ததும்... அது சொல்ல அரம்பிக்கும். //// விசாரணை வகை - 1- பட்டோலை ,2- மலக்குகள் எழுதுவார்கள்,3- உறுப்பு சாட்சி சொல்லும் 4 -பூமி சாட்சி சொல்வது.
வசனம் 6-
மக்கள் பல்வேறு நிலைகளில் திரும்புவார்கள். இந்த துனியா பரிட்சை முடிந்து நிலையான வாழ்வுக்கு திரும்புவார்கள் . அவர் அவர் அவர் அவர் படித்தரத்தில் பிரிந்து நிற்பார்கள், அமல்களின் அடிப்படையில். மூமீன் , நிராகரிப்பாளர் , அமல்களில் சிறந்தவர் , குறைந்தவர் , சுவன செல்பவர்கள் , நரகம் செல்பவர்கள். அன்று நாம் துனியாவில் செய்த அமல்கள் என்ன எண்ணத்தில் , என்ன நிய்ய்யாவில் , என்ன நோக்கத்தில் செய்தோம் , நல்ல அமல்கள் ஏற்றுகொள்ளப்படுமா?அதற்கு கூலி உண்டா , அல்லது இல்லையா ? உணர்வோடு கவனத்தோடு செய்தோமா ? அல்லது உணர்வில்லாது தெரியாமல் செய்தோமா ( பார்க்கிறது , கேட்கிறது , பேசுகிறது )  தவறான செயல்களுக்கு என்ன கூலி ? என்று அனைத்து செயல்களும் நம் எண்ணத்திற்கு ஏற்ப பிரித்து அறிவிக்கப்படும்.
வசனம் 7 – அணு அளவு – அரபுகள் மத்தியில் – எறும்பின் முட்டை அளவு .
சூரிய ஒளியில் தெரியும் தூசி துகள்கள் அளவு . – தர்ரா – அந்த அளவு சிறிய , வலுவில்லாத  பொருள் , அந்த அளவு நன்மையோ , தீமையோ அந்நாளில் காணலாம்.
வலுவில்லாத செயலும் அன்று கனமாக இருக்கலாம் .
வசனம் 8 – நன்மைகள் போலவே தீமைகளும் , என்ன எண்ணம் ,என்ன நோக்கத்தில் செய்யப்பட்டது என்று அனைத்தும் அன்று அறிவிக்கப்படும் .
அவர் அவர் தகுதிக்கு ஏற்ப நன்மை பிரிக்கப்படும் , ஏழை குறைவாக குடுத்தாலும் அது கனமாக இருக்கும் , வசதி உள்ளவர் அவரை விட அதிகமா கொடுத்து இருந்தாலும் அவருக்கு அல்லாஹ் கொடுத்த தகுதிக்கு அவர் குடுத்தது  குறைவே .... இது போலவே அமல் களும். QUANTITY AND QUALITY – அவர் அவருக்கு ஏற்ப.
எந்த ஒரு நல்ல , தீய செயலையும் அற்பமாக கருத வேண்டாம் , தண்ணீர் , சிரிப்பு , கை கொடுப்பது ..... அற்ப செயலால் நரகம் செல்லலாம் , அற்ப செயலால் சுவனம் செல்லலாம். நல்ல எண்ணகளும் , நல்ல பேசிகளும் ஒரு வகை நன்மை ...... சிறுக சிறுக விறகு சேர்த்து தீ முட்டுவது போல் , சிறு சிறு தீமையும் , நாம் பொருட்படுத்தாத சிறு தீய செயலும் நாளை மறுமையில் மழை போல் நிற்கலாம் ... அல்லாஹ் பாதுக்காப்பனாக.
பெரிய ஸுராஹ்வை சுருக்கி நபா , நாசியாத் , அதையும் சுருக்கி சில்சால் , காரியா , ஆதியாத் , தாகசூர் – விசாரணை உண்டு , உலகம் நிரந்தரம் அல்ல என்ற கருத்து கொண்டது.
இனி நாம் என்ன செய்யலாம் ( hw  )
  1. வார்த்தைக்கு வார்த்தை பொருள் படித்தல்
  2. இந்த ஸுராஹ் அடிப்படை கருத்து என்ன.
  3. முதல் வசனத்தில் 2 முறை வரும் சில்சிலத்தில் , சில்சால் – எதை குறிக்கிறது.
  4. இறைவன் கட்டளை படி பூமி எதையெல்லாம் வெளியே கக்குகிறது , அதில் முக்கியமானது என்ன.
  5. அணு அளவு என்பதின் அரபு சொல் என்ன.
வஸ்ஸலாம்.
 
1841. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமி தனது வயிற்றிலுள்ள புதையல்களான தங்கக் கட்டி, வெள்ளிக் கட்டி ஆகியவற்றைத் தூண்களைப் போன்று வாந்தியெடுக்கும். அப்போது கொலை செய்தவன் வந்து, "இதற்காகவே நான் கொலை செய்தேன்" என்று கூறுவான். உறவுகளை அரவணைக்காதவன் வந்து, "இதற்காகவே நான் என் இரத்த உறவுகளைத் துண்டித்தேன்" என்று கூறுவான். திருடன் வந்து, "இதற்காகவே எனது கரம் துண்டிக்கப்பட்டது" என்று கூறுவான். பிறகு அதை (அப்படியே) விட்டுவிடுவார்கள்; அதிலிருந்து எதையும் எடுக்கமாட்டார்கள் (அந்த அளவிற்கு அவர்கள் ஏற்கெனவே வசதியுடனிருப்பார்கள்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :12

1 comment:

  1. Next sura bayyina Tafseer la enga irku please update or give me a contact

    ReplyDelete