بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الرَّحِيمِ
17/12/14.அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
v கிராஆத் - சகோதரி சாஹிரா - (ஸுராஹ் காபிரூன் ( காபிர்கள் ) –
v ஸுராஹ் இக்லாஸ் சிறு குறிப்பு
v ஸுராஹ் இக்லாஸ் வா / வா பொருள் + வா / வா விளக்கம் - சகோதரி ரினோசா
v ஸுராஹ் இக்லாஸ் தப்சீர் – சகோதரி பர்ஹானா
v நபிகள் நாயகம் வரலாறு – பிறப்பு – பகுதி 2 – சகோதரி கதிஜா ஜாஸ்மின்
v துஆஹ் மனனம் – ஷிபா ( குணம் ) தரும் துஆஹ் .
v அஸ்மா உல் ஹுஸ்னா – 1 – 25
விளக்கம் :-
4 வசனங்கள் . 112 வது ஸுராஹ்
மக்காவில் அருளப்பட்டது. 2 ஸுராஹ் ஒரே அடிப்படை
கொண்டது .
ஸுராஹ் காபிரூன் மற்றும் ஸுராஹ் இக்லாஸ் –
அடிப்படை – ஏகத்துவம் – ஒரே இறைவன் , ஷிர்க்கை முற்றிலுமாக ஒழிக்கிறது .
ஸுராஹ் பாத்திஹா போல் இக்லாஸ் கும் பல பெயர்கள் ,
பல பெயர்கள் முக்கியத்துவத்தை குறிக்கிறது .
முக்கியமான சில பெயர்கள் :-
Ø ஸுராஹ் அத் – தபரீத் – தனித்தன்மை
Ø ஸுராஹ் அத் – அஜ்ரீத் – அல்லாஹ்வை பற்றிய தவறான
எண்ணங்களை கலைதல் .Ø ஸுராஹ் அத் – தவ்ஹீத் – அல்லாஹ் ஒருவன் . பண்புகளை ஒருங்கிணைத்தல் .
Ø ஸுராஹ் அல் – மஹ்ரீபா – அல்லாஹ்வை அடையாளம் காணுதல்
Ø ஸுராஹ் அஸ் – சமத் – இந்த ஸுராஹ்வில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது .
Ø ஸுராஹ் அல் – அசஸ் – குர் ஆன் சாராம்சம் , நபியின் தூது .
Ø ஸுராஹ் அல் – முகஸ்கீஸ் – முழுமையாக குணம் பெறுதல் , ஷிர்க் அகற்றுதல் .
- நபிகள் ஸுராஹ் காபிருன் மற்றும் ஸுராஹ்
இக்லாஸ் இரண்டையும் அதிக தொழுகையில் ஓதியுள்ளார்கள் , முக்கியமாக பஜ்ர் முந்திய
இரண்டு சுன்னதிலும் , மக்ரிப் பின் சுன்னதிலும் .
- நிராகரிப்பாளர்கள் , அல்லாஹ் எப்படி இருப்பான் என்பதை பற்றி கேட்ட கேள்விக்கு
– அல்லாஹ் பதில் .
- சஹாபாக்கள் விரும்பிய ஸுராஹ் .
ஹதீஸ் – 5013/5014/5748
- படைத்தலைவர் ஓதிய ஹதீஸ் மற்றும் அன்சாரி சஹாபா
குபா பள்ளியில் ஓதிய ஹதீஸ் .
- காலை மாலை குல் ஸுராஹ்கள் ஓதினால் , முழு
பாதுக்காப்பு .- இரவில் 3 குல் ஸுராஹ் கள் 3 தடவை ஓதி தடவுதல் ஹதீஸ் .
குர்ஆன் மூன்று அடிப்படைகளைக்
கொண்டது
1) இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவ நெறியை நிலை நாட்டுவது.
2) மறுமையை நினைவூட்டி மனிதனை நெறிப்படுத்துவது.3) இறைதூதர் வரலாற்றைக்கூறி வாழ்வை சீர்படுத்துவது
இவற்றுள் ஏகத்துவ நெறியை
இவ்வத்தியாயத்தில் எடுத்துரைப் பதால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் இதனை
குர்ஆனின் மூன்றிலொரு பகுதிக்கு சமமானது எனக் கூறினார்கள்.
வா / வா சிறு விளக்கம் –( மற்ற வா / வா பொருள்
வகுப்பில் கொடுக்கப்பட்டது., விளக்கங்களின்
குறிப்புகள் மட்டுமே பதிகிறேன் )
قُلْ – கூறுவீராக .
1.
நபிக்கு படிக்க ,
2. மற்றவர்களிடம் கூற / மற்றவர்களுக்கு கற்று கொடுக்க , நபிக்கு கட்டளை .
2. மற்றவர்களிடம் கூற / மற்றவர்களுக்கு கற்று கொடுக்க , நபிக்கு கட்டளை .
أَحَدٌ – ஒருவன் . வாஹித் – அஹத் இரண்டுமே பொருள் ஒன்று , வித்தியாசம் .
அஹத்: ஒன்று என்ற
பொருளைக்குறிக்க அரபியில் வாஹித்,அஹத் என்ற இரு சொற்களைப்
பயன்படுத்தினாலும் இரண்டிலும் பொருளில் வேறு பாடுகள் உண்டு.
வாஹித்: எண்ணிக்கையில்
குறைந்த எண்ணைக்குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒருமனிதன், ஒருபேனா , ஒரு நாடு என
ஒவ்வொன்றையும் தனித்தனியே குறிக்கப் பயன்படுத்தப்படும்.
அஹத் : எந்த ஒன்றும்
எவ்வகையிலும் சமமாக முடியாத-ஒன்றுக்கு மேற்படாத-ஒரே ஒரு பொருளைக் குறிக்கவே
பயன்படுத்தப்படும். இதனால் தான் அரபிமொழியில் இச்சொல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே
கையாளப்படுகிறது.
அனைத்து மக்களுக்கும் ,
அனைத்து படைப்புகளுக்கும் அவன் ஒருவன் .
الصَّمَدُ – தேவைகள் இல்லாதவன் ./ அனைத்து தேவைகளின் போதும் நோக்கப்படும் தலைவன் .
நிலையானவன் , மாறாதவன் , நிரந்தரமானவன் ,
வாய்மையானவன் .... அனைத்து படைப்புகளும் அவனிடமே தேவை உடையவர்களாக இருக்கிறோம் .
அல்லாஹ்வின் ஒரு ஒரு பெயரும் பொருள் நிறைந்தவை , அது போல் அந்த தன்மை முழுதும்
நிறைந்தவன் . 100 %
perfect match .
குர்ஆனில் ஒரு முறை மட்டுமே வரும் சொல் .
كُفُوًا - நிகரான / தன்மைக்கு சமமான / மனைவி என்று பொருள் .
எந்நேரமும் அவனிடம் கேட்கலாம் . எந்நேரமும்
நமக்காக பதில் தர அவன் அல்லாஹ் தயாராக உள்ளான் . ( மனைவி , மக்கள் , பெற்றோர்
இருந்தால் இது சாத்தியமற்றது ).
அல்லாஹ் இந்த ஸுராஹ்வில் அவனது 5 தனித்தன்மைகள்
சொல்கிறான் .....
1. அல்லாஹ் அஹத்
2.
சமத்3. லம் யளித்
4. வலம் யுளது
5. குபுவ் .
இந்த 5 தன்மைகள் உடைய வேறு கடவுள் இருக்கவே
முடியாது . ரப் ஒருவனே . ( டாக்டர் . ஜாகிர் நாயக் .... lecture hint ).
இனி இன்ஷா அல்லாஹ் நாம் என்ன படிக்கலாம் .......
- வா / வா பொருள் படித்தல்.
- ஸுராஹ் இக்லாசின் வேறு பெயர்களை படித்தல் ( BOLDED )- அவனது தனி தன்மைகள் புரிதல் .
- குறிப்பிட்டு இருக்கும் ஹதீஸ் களை வாசித்தல் , மனதில் நிறுத்துதல் .
- நபிகள் நாயகம் செய்த சுன்னாவை பின்பற்றுதல் .
ஜசாக் அல்லாஹு ஹைரன்.
வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment