Saturday, February 14, 2015

வகுப்பு 8 - ஸுராஹ் காபிருன்.


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ.

05/2/15
ஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  ஸுராஹ் அலக்  – கிராஆத் - சகோதரி நாதிரா பானு .
v  ஸுராஹ் காபிருன்   சிறு குறிப்பு
v  ஸுராஹ் காபிருன் வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா
v  ஸுராஹ் காபிருன்  தப்சீர் – சகோதரி ஜீனத்  . 
v  சீராஹ் 4 - நபித்துவத்தின் தொடக்க நிலைகள் சகோதரி கதிஜா ஜாஸ்மின்
v  துஆஹ் மனனம் – கடமையான தொழுகைக்குப் பிறகு  - துஆஹ் .
v  அஸ்மா உல் ஹுஸ்னா – 51  – 55

விளக்கம் –

மக்கீ ஸுராஹ் . 6 வசனங்களை கொண்டது . மக்காஹ் வாழ்வின் கடைசி காலத்தில் இறக்கப்பட்டது . ஏகத்துவத்தை 13 வருடங்களாக நபி பிரசாரம் செய்து , மக்காஹ்வை விட்டு மதீனா போகும் முன் இறக்கப்பட்டது . உங்கள் மார்க்கமும் , என் மார்க்கமும் இணையவே முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிய ஸுராஹ் .

அனைத்து நம்பிக்கையாளர்களும் மனதில் அழமாக பதிய வேண்டிய  விஷயம்  – தவ்ஹீத் – முக்கிய அடிப்படை .ஷிர்க்கில் இருந்து முழுவதுமாக விலகி இருக்க வேண்டும் .

ஸுராஹ் காபிருன் + ஸுராஹ் இக்லாஸ் = இக்லாசைன் – ஏகத்துவ பாடத்தை சொல்லும் ஸுராஹ் கள் . நபிகள் மிகவும் விரும்பிய ஸுராஹ் கள் . பஜர்,மக்ரிப்  சுன்னத்திலும்,விதர் கடைசி 2 ரக்காத்திலும் , தவாப்  முடித்து 2 ரக்காத்திலும் ஓதினார்கள் இறைவன் ஒருவன் என்பதையும் அவன் தன்மைகளை இந்த ஸுராஹ் கள் விவரிப்பதால் நபிகளும் , சஹாபாக்களும்  விரும்பினார்கள்

நபிகளை கடுமையாக எதிர்த்தும் , கொடுமை செய்தும், துன்பம் கொடுத்தும் வந்த குறைஷிகள் , நபி ஸல் அல்லாஹ்வின் கொள்கையில் மிக பலமாக , உறுதியாக இருந்ததை பார்த்து , குறைஷிகள் ஒரு வருடம் அவர்கள் கடவுளையும் , ஒரு வருடம் அல்லாஹ் வையும் வணங்கலாம் என்று சமாதானம் பேசும் போது , அல்லாஹ் 2 முறை  கடுமையாக கண்டித்து இந்த ஸுராஹ் வை இறக்கி , நபிகளை காபிர்களிடன் அறிவிக்க சொல்கிறான்.

காபிருன் -  காபிர் – ஒருமை , காபிருன் – பன்மை . குப்ர் – மறுப்பாளர்கள் . அடிப்படையாக நம்ப வேண்டிய அனைத்தையும் நம்பவில்லை . ஒரு மூமீன் நம்ப வேண்டிய விஷயங்கள் –

-    அல்லாஹ் ,
-    அவன் தூதர் ,
-    வானவர்கள் ,
-    வேதங்கள் ,
-    கலா கத்ர் , ( நன்மை , தீமை அல்லாஹ் நாடிய படியே நடக்கும் )
-    இறுதி நியாய தீர்ப்பு நாள் - மறுமை .  

அவர்கள் சிலதை ஏற்று சிலதை மறுத்தார்கள், இவ்வகையான அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் தெளிவாக இந்த ஸுராஹ் மூலம் பதில் சொல்கிறான் . இத்தோடு மக்காவில் தாவாஹ் பணிகள் நிறைவு பெறுகிறது என்பதையும் மறைமுகமாக குறிக்கிறது . நபிகள் அவர்களாக பேசவில்லை  அல்லாஹ்வின் வார்த்தைகளை கொண்டுதான்  அறிவிப்பு செய்கிறார்கள்  என்பது அவர்களுக்கு நன்றாக புரியும் , எப்படி என்றால் – அல்லாஹ்வின் வசனங்கள் , குரான் வசனங்கள் தெளிவான , அழகிய அரபில் மற்றும் சிறு  பிழை கூட இல்லாத கோர்வையான அரபு மொழியில் வரும் .

நடைமுறையில் பேசும் அரபு வேறு .

காஹபிர்கள் - ஒரு சபையில் அமர்ந்து இருக்கும் போது , அல்லாஹ் சொன்ன இந்த அறிவிப்பை நபிகள் அவர்களிடம் அறிவிக்கிறார்கள் .

அஹ்புது – நான் வணங்க , இபாதா – வணக்கம் , அப்து – அடிமை  - ஓரே வேர் சொல் .

அல்லாஹ்வின் அடிமை – 5 விஷயங்கள் –

1-     கீழ்ப்படிதல் – அல்லாஹ் சொன்ன அனைத்து விசயங்களுக்கும் .
2-     நேசித்தல் – முதலில் அல்லாஹ் , அவன் தூதர் , அதன் பின் அவர்கள் கீழ் அனைத்தும் என்று இருக்க வேண்டும் .

அவனை நேசித்து அமல்கள் செய்தல்
3-     தவக்கல் – முழு நம்பிக்கை வைத்து , அவனையே சார்ந்திருக்க வேண்டும்.
4-     நேர்மை – வணக்கங்கள் , உதவிகள் , சதகா மேலும் மற்ற அனைத்து நல்ல விசயங்களும் அவன் ஒருவன் சந்தோசத்தை அடையவே செய்ய வேண்டும் . மனதில் மற்றவர்களுக்காக என்று எண்ணம் வந்தால் அதுவும் சிறிய வகை ஷிர்க்கில் முடியும்.முழு பலன் கிடைக்காது . அல்லாஹ் பாதுக்காப்பனாக 

5-     அடிமை விதிகள் – வணக்கங்கள் , அவன் சொன்ன முறையில் , அவன் சொன்ன நேரத்தில் , நபிகள் காட்டி தந்த வழியில் செய்வது (( நாமாக ஒரு முறை வைத்து அவன் ஏற்பான் என்று எண்ணுவது தவறு ))

( இமாம் இப்னு தய்மீய்யா )

வணங்கும் நேரத்தில் வணங்கி , மற்ற நேரத்திலும் அவன் அனுப்பிய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இதில் அடங்கும் – இதன் அரபு சொல் – உபுதியா – வணங்கி – அடிபணிதல் .

இவை அனைத்து ஒரே வேர் சொல்லில் இருந்து வரும் வார்த்தைகள் – இபாதா , அப்து ,உபுதியா , அஹ்புது , நஹ்புது , மேலும் ............
 
நான் வணங்கமாட்டேன் என்று இரு முறை சொல்வது –

-     வணங்கும் முறையையும் , வணங்குபவனை யும் தனி தனியாக குறிக்கிறது .
-    மேலும் இறந்த காலத்தையும் , வரும் காலத்தையும் தனி , தனியாக குறிக்க இரு முறை வருகிறது .
-    மேலும் அவர்கள் ஒரு வருடம்  - ஒரு வருடம் என்று சொல்வதால் , இவ்விரண்டுக்கும் தனிய தனியாக பதில் சொல்வதையும் குறிக்கிறது .

நபிகள் நுபுவத்துக்கு முன்பே வணங்கியதில்லை , தற்போதும் வணங்கமாட்டேன்  , இனியும் வணங்கமாட்டேன் என்பதை தெளிவாக அல்லாஹ் சொல்ல சொல்கிறான் , - இறந்த காலம் , நிகழ் காலம் , வரும்காலம் . ,(  அதாவது தூதர் என்று தெரியாத காலத்தில் வணங்காத நபி , அல்லாஹ்வின் கடைசி தூதர் என்று அல்லாஹ் அறிவித்த பின் வணங்குவேனா என்று கேட்கிறார்கள் )

அதே போல் அவர்களும்- காபிர்களும்  எப்போதும் ஏற்க மாட்டார்கள் , குபிரிலயே இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது . முன்னரும் அவர்கள் அல்லாஹ்வை வணங்கவில்லை , இப்போதும் வணங்கவில்லை என்பதை அல்லாஹ் சொல்கிறான் .

மா என்ற சொல் அவர்கள் சிலைகளை குறிக்கும் போது – எதை என்று உயிர் அற்ற பொருளை குறிப்பது போல் குறிக்கிறது ,

அல்லாஹ்வை குறிக்கும் போது எவனை என்று வருகிறது இது அவன் தன்மைகளையும் சேர்த்தே குறிக்கிறது .

லக்கும் தீனுக்கும் வலியதீன் –

உங்கள் மார்க்கம் உங்களுக்கு , என் மார்க்கம் எனக்கு –

 என்று வருவதை – நபிகள் – காபிர்களை  கண்டுக்கொள்ளவில்லை , அவர்களை அப்படியே விட்டு விட்டார்கள் , உங்களுக்கு உங்களது , எனக்கு என்னுடையது என்று சமாதானம் ஆகிவிட்டார்கள்  என்று மிக பெரிய  தப்பான பொருளை இன்று கருதுகிறார்கள் .

இவ் வசனத்தின்  உண்மையான பொருள் :-

-    மக்காவில் நபிகளின் ஒரே நோக்கம் , குறிக்கோள் , பணி - தவாஹ் வாக மட்டுமே இருந்தது , ஆனால் இதன் பின் இனி தவாஹ் பணிகள் மக்காவில் முடிந்துவிட்டது , மக்காஹ்வை விட்டு வெளியேற போகிறேன் என்பதை இவ்வசனம் சொல்கிறது  , ஹிஜ்ரத் தை அறிவிக்கும் விதமாக இவ் வசனம் வருகிறது   . SO , பிரசாரம் முடிந்தது உங்கள் மார்க்கம் உங்களுக்கு , என் மார்க்கம் எனக்கு .
 
-    தீன் என்பது – தீர்ப்பு என்றும் பொருள் கொண்டது . உங்களுக்கு உங்கள் தீர்ப்பு , மேலும் எனக்கு என் தீர்ப்பு ... தீர்ப்பு நாளில் - அங்கு பார்க்கலாம் ... உங்களுக்கு நரகம் உறுதி என்று பகிரங்கமாக சொல்லும் விதமாகவும் இவ்வசனம் இருக்கிறது .
 
-    13 ஆண்டுகள் தவாஹ் பின் , இனி உங்களை வார்த்தைகளால் சந்திக்க / மாற்ற முடியாது , வாளால் சந்திக்கலாம் , யார் மார்க்கம் மேலோங்கி நிற்க போகிறது என்பதை பார்ப்பீர்கள் . அல்லாஹ்வின் மார்க்கம் உங்கள் மார்க்கத்தை தோற்கடிக்கும் , உங்களுக்கு மேல் அல்லாஹ்வின் வெற்றியும் , மார்க்கமும் மேலோங்கி நிற்கும் என்று பகிரங்கமாக சவால் விட்டு செல்கிறார்கள் என்பதையும் இவ்வசனம் குறிக்கிறது . என்று மார்க்க அறிஞ்ர்கள் சொல்கிறார்கள் .

எதற்காக இந்த சவால் , எதற்காக இந்த பகிரங்கமான அறிவிப்பு ???

இப்ராஹிம் நபியின் மார்க்கத்தை பரிசுத்தமாக மக்காவில் நிறுவ வேண்டும் , அதற்க்கு மக்காவில் ஹரம்மை சுற்றி இருக்கும் பல சிலைகளை அகற்ற வேண்டும் , இஸ்லாத்தை அங்கு தூய்மையாக்க வேண்டும் அதற்க்கு அவர்கள் மார்க்கத்தை அங்கு இருந்து அகற்ற வேண்டும் , அல்லாஹ்வின் வீட்டை தூய்மையாக்க வேண்டும் , அந்த வீடு எதற்காக கட்டப்பட்டதோ அதன் நோக்கமும் , அங்கு நடக்க வேண்டிய இபாதத்தும் அங்கு நடைபெற வேண்டும் ... அதற்க்கு சிலைகளை அங்கு இருந்து அப்புறப்படுத்த வேண்டும் . இப்ராஹிம் நபியின் மார்க்கம் பரிபூரணம் அடைய வேண்டும் அதற்க்கு போர் தான் வழி . என்று பகிரங்க அறிவிப்பை அல்லாஹ் வின் கட்டளை படி செய்கிறார்கள் .

நீங்கள் செய்வதை செய்யுங்கள் , நான் செய்வதை செய்கிறேன் , அல்லாஹ்வின் மார்க்கம் உறுதியானது , அது உங்களை முறியடிக்கும் என்று அறிவிக்கிறார்கள் .

( *********** இந்த பின் நடந்த விஷயங்கள் , அல்லாஹ் தந்த பகிரங்க வெற்றி இப்படி  அனைத்தையும் போன ஸுராஹ் ( அதாவது வரிசை படி இதற்க்கு அடுத்த ஸுராஹ் ) நஸ்ரில் பார்த்தோம் ***********)

இதற்க்கு முந்திய ஸுராஹ் கவ்ஸருக்கும் இதற்கும் ஒரு சிறு தொடர்பு – அதாவது அதில் – நபி க்கு ஆண் சந்ததிகள் இல்லை , வம்சம் துண்டித்து விட்டது என்று சில நிராகரிப்பாளர்கள் சொல்லி கொண்டு அலைந்தார்கள் . அதற்க்கு அல்லாஹ் அந்த ஸுராஹ் விலும் குறிப்பிடுகிறான் ., இன்ஷா அல்லாஹ் அதை வரும் வகுப்பில் பார்ப்போம் ...

அது தொடர்பாக இந்த ஸுராஹ் விலும் சொல்கிறான் , எப்படி ?  நான் வணங்கமாட்டேன் , நான் வணங்குகிறேன் , என் மார்க்கம் , எனக்கு

என்று அனைத்தையும் ஒருமையிலேயே சொல்ல சொல்கிறான் , எதற்கு? சந்ததிகள் இல்லாமல் போனாலும் , நபி மட்டுமே இஸ்லாத்திற்கு போதும் , நபி மட்டுமே முழு உலகிற்கும் போதும் , நபியை மட்டுமே வைத்து அல்லாஹ் இஸ்லாத்தை மேலோங்க செய்வான் அல்லாஹ் என்பதை இந்த ஒருமை குறிக்கிறது , அவர்கள் நபியின் வம்சம் அறுந்து விட்டது இனி இஸ்லாம் வளராது என்று சொல்லி திரிந்ததற்கு அல்லாஹ் பதில் சொல்கிறான் .

தன் வார்த்தைகளை தான் நபி சொல்கிறார்கள் , அறிவிக்கிறார்கள் என்பதை அல்லாஹ் தெளிவாக சொல்கிறான் .

இனி நாம் என்ன செய்யலாம் – HOME WORK –

1-     வா – வா பொருள் – WHATSAPP VOICE .
2-     இந்த ஸுராஹ் தெளிவாக சொல்லும் விஷயம் என்ன . ( திட்டவட்டமாக )
3-     இக்லாசைன் – பொருள் .
4-     இரு மார்க்கமும் சமாதானமாக இருக்க - கடைசியாக குறைஷிகள் கொண்டு வந்த கோரிக்கை என்ன .
5-      காபிர் – பன்மை என்ன ?
6-     மூமீன் நம்ப வேண்டிய விஷயங்கள் என்ன .
7-     குர் ஆன் வசனங்கள் எவ்வாறான அரபில் இருக்கும் .
8-     இபாதத் – 5 விஷயங்கள் .
9-     உபுதியா என்றால் என்ன
10-  இந்த ஸுராஹ் சொல்லும் வருங்கால முக்கிய செய்தி ? ( நடக்கவிருக்கும் நிகழ்வு )
11-  இப்ராஹீம் நபியின் மார்க்கம் ஹரமில்  பரிபூரணமடைய , ஹரமில் என்ன நடக்க வேண்டும் .
12-  காபிருன் பொருள்
13-  இந்த ஸுராஹ் வில் “ மா “ என்ற அரபு சொல்லின்  – இரு பொருள்கள்

வஸ்ஸலாம் . ஜசாக் அல்லாஹு ஹைரன் .

No comments:

Post a Comment