Friday, February 13, 2015

வகுப்பு 4 - ஸுராஹ் பஃலக் .


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 
30/12/14.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  கிராஆத் - சகோதரி பர்ஹானா -  ஸுராஹ் தீன்  ( அத்தி )  
v  ஸுராஹ் பஃலக் சிறு குறிப்பு
v  ஸுராஹ் பஃலக் வா / வா பொருள் + வா / வா விளக்கம்   -  சகோதரி ரினோசா
v  ஸுராஹ் பஃலக் தப்சீர் – சகோதரி பரீனா 
v  நபிகள் நாயகம் வரலாறு – பிறப்பு – பகுதி 2 – சகோதரி கதிஜா ஜாஸ்மின்
v  துஆஹ் மனனம் – கண்ணூரில்லிருந்து பாதுக்காப்பு - துஆஹ் .
v  அஸ்மா உல் ஹுஸ்னா – 31-35

                      விளக்கம் :-

         5 வசனங்களை கொண்டது , மக்கா வில் இறக்கப்பட்டது.ஸுராஹ் பீல் பின் இறக்கப்பட்டது .

      ஸுராஹ் பஃலக் , ஸுராஹ் நாஸ் – கடைசி இரண்டு ஸுராஹ் கள் ., ஒன்றாகவே                    சொல்லப்படும் ஸுராஹ் .

      முஅவ்விதத்தைன் – இறைவனிடம் பாதுகாப்புத் தேடும் இரு அத்தியாயங்கள் – என்று இவ்விரண்டுக்கும் பெயர் .

      ஸுராஹ் பஃலக் – வெளி தீங்கில் இருந்து பாதுகாப்பு

      ஸுராஹ் நாஸ் – உள்ளே உள்ள தீங்கில் இருந்து பாதுகாப்பு

      எதிரிகள் செய்த சூனியத்தில் நபிக்கு இலேசான பாதிப்பு ஏற்ப்பட்ட சமயத்தில் அல்லாஹ் இதை இறக்கி பாதுகாவல் தேட ஓத சொன்ன ஸுராஹ் .

             வா / வா  சிறு விளக்கம் –( மற்ற வா / வா பொருள் வகுப்பில் கொடுக்கப்பட்டது., விளக்கங்களின் குறிப்புகள் மட்டுமே பதிகிறேன் ).

               قُلْ கூறுவீராக .

1.       நபிக்கு படிக்க , 2. மற்றவர்களிடம் கூற / மற்றவர்களுக்கு கற்று கொடுக்க , நபிக்கு கட்டளை.

                 أَعُوذُ -        பாதுகாப்பு / முழுவதுமாக அவனிடமே சார்ந்து பாதுகாவல் தேடுதல் .கண்ணுக்கு             தெரிந்த / தெரியாத தீங்கில் இருந்து முழுவதுமாக பாதுகாப்பு ,/ அனைத்தையும் படைத்த ஒருவனிடம் பாதுகாப்பு தேடுதல் .

 

     الْفَلَقِ - வைகறை ,

-    கிழித்து கொண்டு வெளிவருதல்
-    இருளை கிழித்து பகல் வெளிவருதல்
-    விதையை உடைத்து செடி வெளி வருதல்
-    மழை – மேகம் கிழித்து வருதல்
-    தாய் – கரு , குழந்தை
-    BIG BANG THEORY – பேறு வெடிப்பு – உலகம்

அனைத்துக்கும் பின் படைப்பு வருகிறது , அனைத்து கிழிதலிலும் ஆபத்து இருக்கிறது ., அனைத்தையும் படைத்தவனிடத்தில் பாதுகாப்பு தேடுவது .( MASTER OF FALAQ ) ., வைகறையின் இரட்சகன் .

 

        شَرِّ    தீமை எதிர்மறை நன்மை ( ஹைர் )

         خَلَقَ  படைத்தான் . படைத்தவன் தான் படைப்பின் தீங்கில் இருந்து நம்மை வெளி கொண்டு வந்து , பாதுகாப்பு தர முடியும் .

அனைத்து நல்ல விஷயங்களிலும் தீமை இருக்கிறது ...

1-      நப்ஸ் - பாதுகாப்பு  – ஒரு சமயம் நல்ல மனிதர் , மறு சமயத்தில் கோபம் கொண்டு , ஆத்திரமாக – நன்மை தீமை . சில சமயம் நல்ல விஷயம் செய்தல் , வேறு சில சமயம் வேண்டாத காரியங்கள் செய்தல் – நன்மை – தீமை .

2-      ஷைத்தான்

3-      மற்ற படைப்புகளின் தீங்கு – உதாரணம் – தண்ணீர் மிகுதி / மழை மிகுதி / வெயில் மிகுதி / காற்று மிகுதி , ஆனால் அனைத்தும் நமக்கு தேவை . இதன் மூலம் ஆபத்து வராமல் இருக்க பாதுகாப்பு தேடுவது .( திருமணம் , பிள்ளை , நடந்து செல்லுதல் ... பல )

    غَاسِقٍ  இருள் / இரவு / முன் இரவு / மக்ரிப் நேரத்தில் இருந்து . சஹாபாக்களை – நபி இரவில் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுரை . கடல் பகுதிகளுக்கும் .

     وَقَبَ  பரவியது – நிலா முழுவதுமாக SETTLE ஆகும் போது , நிலா முழுவதும் பரவிய பின் ,  திருட்டு , கொலை , விஷ ஜந்துக்கள் வெளிவருதல் , நோய்கள் அதிகரித்தல் .கெட்ட காற்று .... அனைத்தும் இச்சமயத்தில் அதிகமாக பரவுதல் .

    النَّفَّاثَاتِ  ஊதுபவர்கள் ( பெண்கள் ) , மந்திரம்  செய்யும் கூட்டம் , ஊதும் போது எச்சில் லேசாக வெளிவருதல் , அவ்வளவு கடினமாக தீங்கு விளைவிக்க ஊதுதல் ., தொடர்ந்து செய்பவர்கள் . 

       الْعُقَدِ  முடிச்சிகள் – இரவில் செய்கிறார்கள் .       

       حَاسِدٍ  பொறாமைக்காரன் . வீடு , பிள்ளைகள் , நிலம் , நகை பார்த்து , அல்லாஹ்வின் அருளை பார்த்து பொறாமை கொள்ளுதல் . (  பொறமை மட்டுமே சில பேர் படுவார்கள். ) அதிலும் தீமை

       حَسَدَ   பொறாமை படும்போது – இப்போதுதான் தீமை அதிகம் , பொறாமைப்படும் போது என்ன செய்கிறான் , தவறான செய்தி பரப்புதல் , அருளை தடை செய்ய மந்திரம் செய்ய செல்லுதல் , கண்ணூர் .... இப்படி பல கொடிய தீமை . இவர்கள் உள்ளம் எப்படி இருக்கும் – இருண்டு போய் இருக்கும் .

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக . இருள் குறித்து  மற்றும் அனைத்து தீமையில் இருந்தும் பாதுகாப்பு பெற அல்லாஹ்   இவ்விரு ஸுராஹ் களையும் , மற்றும் ஸுராஹ் இக்லாஸ் சையும் சேர்த்து ஓதி வர சொல்கிறான் . நபி இரவில் இந்த மூன்று ஸுராஹ் களையும் ஓதி,ஊதி  உடல் முழுவதும் தடவுவார்கள் ஆடு , புலி , சிங்கம் , வெயில் , மழை போன்றவற்றில் இருந்து வேலி போட்டு பயிர்களை , நம்மை நாம் பாதுகாப்பது போல் , இத் துஆவை ஓதி அல்லாஹ்வின் பலமான வேலியை பெறுவோம் .

இதை தவக்கலோடு ஓதி அனைத்து எதிரிகளிடமிருந்து அல்லாஹ் நம்மை காப்பானாக என்று துஆஹ் செய்வோம் .

இனி நாம் என்ன படிக்கலாம் .......

-    வார்த்தைக்கு / வார்த்தை பொருளை படித்தல்
-    தீங்கு தரும் பல விஷயங்களை அறிதல் .
-    தினமும் மறவாமல் ஓதுதல் .
-    முடிந்த அளவு – நடு இரவில் வெளியே செல்வதை தவிர்த்தல் .

ஜசாக் அல்லாஹு ஹைரன் . வஸ்ஸலாம்

No comments:

Post a Comment